தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் இளையதளபதி விஜய். நடிப்பு, ஆடல். பாடல் என பல திறமைகளை கொண்ட இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் நன் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலில் நடனமாடி இருந்தார். மேலும் அவரது மகள் திவ்யா தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜயின் மகன் சஞ்சய் குறும்படம் ஒன்றில் நடித்ததன் மூலம் சமூகவலைத்தளங்களில் பிரபலமானார். மேலும் அவர் திரையில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவியது.
இந்நிலையில் சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வரும் இளைய தளபதியின் மகள் திவ்யா தீவிரமாக பேட்மின்டன் கோச்சிங் எடுத்து வருகிறார். மேலும் திவ்யா பயிலும் பள்ளியில் உள்ள பேட்மிட்டன் அணி சமீபத்தில் கலந்துகொண்ட தொடரில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.அவற்றில் திவ்யாவும் பங்கேற்றுள்ளார்.
அந்த தொடரின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பள்ளி நிர்வாகம் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது
இதனால் திவ்யா தனது தந்தையை பெருமைப்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.






