பாலியல் தொழிலாளி தொண்டு நிறுவனத்திற்கு இளவரசர் ஹரியுடன் வருகை தந்த மேகன், அவர்களுக்கு தன்னுடைய ஆதரவை வாழைப்பழத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி தன்னுடைய கர்ப்பிணி மனைவியுடன் இன்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பிரிஸ்டல் பகுதியில் ஆரம்பித்து நகரின் கலாச்சார வரலாறு நிகழ்ச்சி, ஆங்கிலம் பேசும் உலகில் பழமையான திரையரங்கம் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி வரும் One25 தொண்டு நிறுவனத்திற்கும் சென்றனர்.
அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, தயாரான நிலையில் உணவு பொட்டலங்கள் இருந்தன.
உடனே ஒரு பேனா கொண்டு வருமாறு மேகன் கூறினார். யாரும் எதிர்பாராத விதமாக, பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதரவு தரும் விதத்தில் மேகன் அங்கிருந்த வாழைப்பழத்தில்,உற்சாகம் தரும் வார்த்தைகளை எழுதினார்.
‘நீங்கள் சிறப்புவாய்ந்தவர்’, ‘நீங்கள் வலுவாக இருக்கிறீர்கள்’ என ஒவ்வொரு வாழைப்பழத்திலும் இதுபோன்று எழுதியிருந்தார்.
இந்த பழங்களானது ஒரு வேனில் ஏற்றப்பட்டு, தெருக்களில் பாலியல் அடிமைகளாகவும் பல்வேறு பிரச்சினைகளாலும் தொழிலில் தள்ளப்பட்டிருக்கும் பெண்களுக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






