தடுப்பூசிக்கு நோய் கட்டுப்படாமல் போகப்போகிறது – அதிர்ச்சியில் ஆழ்த்திய அறிவிப்பு..!

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை வரைமுறையில்லாமல் பயன்படுத்துவதால், நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்படாமல் போகும் நிலை, உலகளவில் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டில், உலகின் மிகமோசமான 10 சுகாதார அச்சுறுத்தல்களை, உலக சுகாதார நிறுவனம் பட்டிய லிட்டுள்ளது. ஹெச்ஐவி, எபோலா, டெங்கு, காற்றுமாசு பாடு,பருவநிலை மாற்றம், தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம்உள்ளிட்டவை மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தல்களாக உள்ளன.

இந்த பட்டியலில், நுண்கிருமிகள் மருந்துக்கு கட்டுப்படாமல் போகும் நிலையும் இடம்பெற்றுள்ளது.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை வரைமுறையில்லாமல் பயன்படுத்தும் நிலை தொடருமானால், நிமோனியா, டி.பி., போன்றவற்றைக் குணப்படுத்துவது கடினமாக இருந்த பழங்கால நிலைக்கு திரும்ப நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை வரைமுறையில்லாமல் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதோடு, மறைமுகமாக உணவுச் சங்கிலி மற்றும் நீரிலும் கிருமிகள் நுழைந்து விடும் நிலை உள்ளது.

இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய செயல் திட்டம் வகுத்துள்ளதுடன், ஆன்ட்டிபயாட்டிக் விற்பனை, பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.