ஈக்கு தாடைகள் ஏதும் இல்லாததால் அது யாரையும் கடிப்பதில்லை. இது உணவு உண் னும் முறை மிகவும் விந்தையானதாகும். தான் உண்ணக் கருதும் சோறு, வெல்லம் போன்ற பொருள்கள் மீது முதலில் சென்று அமரும்.
பின் அதன் மீது தன் தட்டையான இரு உதடுகள் மூலம் உமிழ்நீரை உமிழும். உமிழ் நீரில் உண்ணும் பொருள்கள் கரையும்வரை அதைத் தேய்த்துக் கொண்டிருக்கும். உமிழ் நீரில் பொருள்கள் நன்கு கரைந்த பின்னர்
அதைத் தன் உறிஞ்சியால் உறிஞ்சி தன் தீனிப் பையில் சேமித்துக் கொள்ளும். தான் ஒய்வாக இருக்கும்போது மாடு அசைபோடு வது போல் அப்பையிலுள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும். இவ்வாறு உண்ணும் போது அத் திரவ உணவு அங்குமிங்குமாகச் சிதறி விழும். இதனால் ஈ இருக்குமிடம் அசுத்தமாகி விடும்.
இதன் கால்களின் நுனிப் பகுதியில் கொக்கி போன்ற உறுப்புகள் உள்ளன. இக்கால்களி லும் உணர்கொம்புகளிலும் மெல்லிய மயிரிழை கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும், ஈ எங்கு அமர்கிறதோ அவ்விடத்தில் உள்ள அசுத்தங்களில் காணும் நோய்க்கிருமிகள் அம்மயிரிழை களில் ஒட்டிக்கொள்ளும். அதற்கு அம்மயிரி ழைகளில் உள்ள ஒருவித பிசுபிசுப்பும் பெருந் துணை செய்கிறது.
சாதாரணமாக ஒரு ஈயின் மயிர்க்கால்களில் ஒரே சமயத்தில் இருபது இலட்சம் நோய்க்கிருமிகள் ஒட்டிக் கொள்ள முடியும் எனக் கண்டறிந்துள்ளார்கள். இதை யும் விட அதிகமான நோய்க்கிருமிகள் ஈயின் குடலில் இருக்கும்.
ஈக்கள் நாம் உண்ணும் உணவில் வந்து உட்காரும்போது அந்நோய்க் கிருமிகளை அவற்றோடு கலந்து விடுகின்றன.
அவ்வுணவை நாம் உண்ணும்போது அந் நோய்க்கிருமிகள் நம் உடலினுள் சென்று நோய்களை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு தான் சீதபேதி, டைபாய்டு, காலரா போன்ற தொற்று நோய்களை வீட்டு ஈக்கள் பரப்புகின்றன. எனவே நாம் உண்ணும் உணவுப் பொருட்களை ஈ மொய்க்காதவாறு மூடி வைக்கவேண்டும்.
இந்த நிலையில் உணவு பொருளின் மீது ஈ அமர்ந்தால் என்ன ஆகும் ? என்பது குறித்த மைக்ரோஸ்கோப் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இதனால் என்னென்ன பாதக விளைவு ஏற்படும் என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.