வென்று அசத்தல்! அழகில் மட்டும் இல்ல அதிரடியிலும் அசத்திய மந்தனா!

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான இந்திய ஆடவர் அணி அசத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இதே நேரத்தில் இந்திய பெண்கள் அணியும் வழியடி வருகிறது. மூன்று போட்டி கொண்ட தொடரில் பெண்கள் அணி ஆடி வரும் நிலையில் முதல் போட்டியில் ஸ்மிரிதி மந்தனா அதிரடி சதத்தினால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வெற்றியை பெற்றது.

இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற இந்திய மகளிர் அணி முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.

நேற்று இந்திய ஆடவர் அணி ஆடிய அதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி இந்திய அணியின் பந்துவீச்சினை தாக்குபிடிக்காமல் 44.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சாட்டர்வெய்ட் 71 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்மிழந்தனர். இந்தியத் தரப்பில் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ், பிஸ்த், சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மந்தனா, மிதாலி அதிரடி ஆட்டத்தினால் 35.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

கடந்த போட்டியை போலவே தொடக்க வீராங்கனைகளாக ரோட்ரிக்ஸ், மந்தனா களமிறங்கினர். ஆனால் 2வது ஓவரில் ரோட்ரிக்ஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த தீப்தி சர்மா 8 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில் கேப்டன் மிதாலி ராஜ் களமிறங்கினார்.

இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்த பிறகு டாப் கியரில் இருவரும் அதிரடி ஆட்டத்துக்கு திரும்பிய பின்னர் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி ஸ்கோரை விரைவுப்படுத்தினர். கடந்த போட்டியில் சதமடித்த மந்தனா இந்த போட்டிகளில் 54 பந்துகளில் அரைசதம் அடித்தார், மிதாலி ராஜ் 102 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஆட்டம் முடியும் போது மந்தனா 90 ரன்களிலும், மிதாலி ராஜ் 63 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்து அசத்தினார்கள். 22 வயதான மந்தனா நல்ல பார்மில் இருந்து வருகிறார். கடந்த 10 ஆட்டங்களில் 8-வது முறையாக அரைசதம் அடித்துள்ளார்.