தொடரும் நிர்வாக முடக்கம்.! கொதித்தெழுந்த பாடகி., பதறிப்போன டிரம்ப்.!

அமெரிக்கா நாட்டிற்குள் மெக்சிகோ எல்லை வழியாக பிறநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதை குறைக்கும் வகையில் அமெரிக்கா அதிபரான டிரம்ப்., அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் மதில் சுவரை எழுப்பும் முயற்சிக்கு ரூ.5.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யக்கூறி அமெரிக்க பாராளுமன்றத்தை ஒப்புதல் கூறினார்.

இதனை கடுமையாக எதிர்த்த ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பாராளுமன்றத்தில் ஒப்புதல் நிறைவேற்றப்படாமல் அமெரிக்க அரசு நிர்வாகமானது முடங்கியது. தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக முடங்கி கிடக்கும் அரசு நிர்வாகத்தின் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக நிறைவு செய்ய எண்ணி அமெரிக்க அதிபரான டிரம்ப் முடிவு செய்தார்

பல முறை அரசு நிர்வாக முடக்கத்தை நிறைவு செய்வதற்கு அனைத்து கட்சியினரும் அழைத்து ஆலோசனை நடத்தி வந்தாலும். அதிபர் டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருப்பதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பிலும்., பலர் ஊதியம் இன்றி பணியாற்றியும் வருகின்றனர்.

இந்நிலையில்., நிர்வாக முடக்கத்திற்கு தீர்வு காண கூறி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் வகையில்., தற்போது அமெரிக்காவின் பிரபல பாடகியான லேடி காகா அரசு துறையில் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்னையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.