திடீரென பரவும் வைரஸ் காய்ச்சல்.! பீதியில் திகைக்கும் மக்கள்!

இந்த உலகத்தின் மோசமான நோய்களில் ஒன்றாக கருதப்படும் நோய்களில் ஒன்று லசா காய்ச்சல். இந்த நோயின் தாக்கமானது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 23 நாடுகளில் தீவிரமாக பரவி 171 பேரின் உயிரை பரிதாபமாக குடித்தது.

மேலும்., தற்போது நைஜீரிய நாட்டில் உள்ள மக்கள் இந்த நோயால் அவதியுற்று வரும் வேளையில்., சுமார் 16 பலியாகியுள்ளதாகவும்., இதன் இறப்பு விகிதமானது சுமார் 26 விழுக்காடாக உயர்ந்துள்ளாதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை தேசிய மைய கண்காணிப்பு அமைப்பானது வெளியிட்டுள்ளது., அதன் படி இந்த வருடத்தின் துவக்கத்தில் சுமார் 172 மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., நைஜிரிய நாட்டில் உள்ள 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்கள் மற்றும் அபுதாபியின் தலைநகர் பகுதிகளிலும் மக்களிடம் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும்., இந்த காய்ச்சலை அதிரடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நைஜீரிய சுகாதார துறையினர் மற்றும் உலக சுகாதார அமைப்பினர் பிரத்தியேக மையங்களை அமைத்து நோயை கட்டுக்குள்கொண்டு வர தீவிரமாக போராடிக்கொண்டு வருகின்றனர். இந்த காய்ச்சலின் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் கடுமையான காய்ச்சல்., வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களாலும் அவதியுற நேரிடும் என்று தெரிவித்தனர்.

இந்த நோய்யானது எலிகள் மூலமாகவும்., நோய் பாதிப்படைந்தவர்கள் மூலமாகவும் எளிதில் பரவும் தன்மையுடையது., இதன் காரணமாக நோயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்., இந்த நோய்யானது முதன் முதலாக 1969 ம் வருடத்தில் கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்தனர்.