தாயாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் மறைவு செய்த மகன்!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் தமது தாயாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் மறைவு செய்த வழக்கில் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹவாய் மகாணத்தின் ஹொனலுலு நகரத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லியூ யுன் கோங் என்ற பெண்மணியை தங்களது குடியிருப்பில் வைத்து யூ வெய் கோங் என்ற அவரது மகன் கொடூரமாக கொலை செய்துள்ளான்.

இந்த வழக்கில் ஹவாய் மாகாண நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு விரக்தியில் இருந்த யூ வெய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த இளைஞர் தமது தாயாரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் மறைவு செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தலை மற்றும் உடல் பாகங்களை ஏழு பைகளில் பாதுகாக்கப்பட்டிருந்தது பொலிசாரால் மீட்கப்பட்டது.

தம்மை பாடசாலைக்கு செல்ல நிர்பந்தித்ததை அடுத்து தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாம் அவரை கொலை செய்துள்ளதாக யூ வெய் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தலையில் ஏற்பட்ட காயமே அவரது மரணத்திற்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால் தாம் தாயரை கொல்ல வேண்டும் என திட்டமிட்டு செய்தது அல்ல எனவும், அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் அது நேர்ந்தது எனவும் யூ வெய் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.