ரஷ்யாவில் 13 முறை கத்தியால் குத்திய பெண்ணிடம் நீதிமன்றத்தில் வைத்து இளைஞர் காதலை கூறியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Nizhnekamsk பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் இன்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட பெண் 13 முறை ஷகுர் என்ற இளைஞரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர், அங்கிருந்து தப்பி வேகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியதாக விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
உடனே அங்கிருந்த ஷகுர், குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார். மேலும், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதாக தேதியை தேர்வு செய்துவிட்டோம். தயவு செய்து தண்டனை கொடுக்க வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.
இதனை கேட்டு குழம்பிய நீதிபதி, அந்த பெண்ணிடம் கேட்கும்பொழுது, சம்பவம் நடைபெற்ற அன்று தான் மது போதையில் இருந்ததால் என்ன நடந்தது என்பது பற்றி தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
உடனே தண்டனை விவரத்தை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.






