ஜிம்மிற்கு செல்லாமலே சிக்ஸ் பேக் வேணுமா? இதை மட்டும் செய்யுங்கள்!

தற்போதைய வாழ்கை முறையில் அனைத்து ஆண்களும் படுவது சிக்ஸ் பேக்கிற்கு(six pack) தான். ஆனால் தற்போது அதிகப்படியான ஆண்கள் கர்ப்பிணி பெண்களை போலவே தொப்பையை வளர்த்து உடம்பை குறைக்க கஷ்டப்படுகின்றனர். ஆண்களுக்கு உடலில் அழகான பகுதி மார்பு மற்றும் வயிற்று பகுதிதான். மார்பு மற்றும் வயிற்று பகுதியை வலிமையை வைத்துக்கொள்ள காலையில் எழுந்தது பர்வத ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

பர்வத ஆசனம்:

காற்றோட்டமான இடத்தில் விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொண்டு வலது காலை இடது கால் தொடை மீதும், இடது காலை வலது கால் தொடை மீதும் வைத்து இரண்டு குதிகால்களையும் சேர்த்து வைத்து அடிவயிற்றின் நடுபாகத்தில் பதியுமாறு அமர வேண்டும்.

இதனையடுத்து மார்பு பகுதியை அதிகமாக புடைத்திருக்கும்படி மெதுவாக சுவாசத்தை முடிந்த வரை உள் இழுத்து இரண்டு கைகளையும் மேல் நோக்கியவாறு உயர்த்தவேண்டும். பின்னர் மூச்சை நிதானமாக வெளியேற்றிக் கொண்டு மெதுவாக கைகளை இறக்கி முழங்கால்களில் வைக்க வேண்டும்.

இந்த ஆசனத்தை 3-7 நிமிடம் வரை செய்யலாம். இந்த ஆசனம் முடிந்தவுடன் சில நிமிடங்கள் கண்கள் மூடி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போது உடலுறுப்புகளை தளர்வாக வைத்திருக்க வேண்டும்.

இதனால் நுரையீரல்கள் சுத்தமாகும், பிராணசக்தி பெருகும், மார்புப் பகுதிகள் விரிவடைந்து
நுரையீரல்களில் சளி சேர்வதை தடுத்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். வயிற்றில் மாந்தம், மற்றும் கிருமிகளால் ஏற்படும் தீமைகள் நீங்கும். அடிவயிற்றில் இறுக்கம் ஏற்பட்டு விரைவில் சிக்ஸ் பேக்(six pack ) வந்துவிடும்.