சைவத்தமிழ் மன்னன் சங்கிலியன்,சைவத்தமிழ் அரசன் பண்டாரவன்னியன் இவர்கள் இருவரையும் யார் கொன்றார்கள்?கொன்றதால் வந்ததே கிறிஸ்தவப் புத்தாண்டு எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அடிமைத்தனத்தின் கொடுமையைக் கொண்டாடுகிறோமே?
புத்தாண்டு என்று பொய் சொல்லிக் கொண்டாடுகிறோமே? கேவலமாக இல்லையா? எனவும் கடுமையாகச் சாடும் வகையிலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டு உதயமாகியுள்ள நிலையில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சங்கிலி மன்னனையும், பண்டார வன்னியனையும் கொலை செய்ததைக் கொண்டாடுவோரே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







