சிறுமி மீது மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சி!

மதுரையில் இளைஞர் ஒருவர் 8 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி  கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறை பகுதியில், வசித்து வருபவர் கணேஷ்குமார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில், கணேஷ்குமாரை உடனடியாக வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கனேஷ்குமாரின் மூத்த மகள் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் உரிமையாளர் மகன், சிறுமி மீது மின்ஒயரை பாய்த்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கணேஸ்குமாரின் குடும்பத்தை மிரட்டடுவதற்காகவே, அந்த இளைஞர், சிறுமி மீது மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.