ஆசைவார்த்தை கூறி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞன்!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் உஷாராணி. இவர் கணவர் இல்லாத நிலையில், குடும்ப கஷ்டத்தினால் தனது இரு மகள்களையும் ஊரில் தங்கவைத்து விட்டு, திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.

மேலும் இவரது மூத்தமகள் சிதம்பரத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் படித்து வருகிறார்.16 வயது நிறைந்த இவர் விளத்தூர் கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த ராகுல் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் அந்த இளைஞனும் நான் உன்னைத்தான் காதலிக்கிறேன், கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஆசை வார்த்தைகளை கூறி அவளை சீரழித்து கர்ப்பமாக்கியுள்ளான்.

மேலும், இதனை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம், நான் உன்னை திருமணம் செய்துகொள்வேன் என அந்த பெண்ணை நம்பவைத்துள்ளான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு வயிற்று வலி அதிகமாகியுள்ள நிலையில் இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளார். உடனே அவர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றபோது வழியில் ஆட்டோவிலேயே அவருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது.

இதனை அறிந்த தாய் நான் எனது பிள்ளைகள் நல்லா இருக்கவேண்டும், படிக்க வேண்டும் என்பதற்காக தனியாக இருந்து, பட்டினி கிடந்து கூலிவேலை செய்து வந்தேன். ஆனால்
என் பிள்ளையை ஆசை வார்த்தை கூறி இப்படி சீரழிச்சிட்டாங்களே என்று அழுது புலம்பியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டநிலையில், போலீசார் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அவளுடன் குடும்பம் நடத்துகின்றாயா என கேட்டதிற்கு,அவ தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் யாரும் ஏத்துக்கமாட்டாங்க ,நான் ஜெயிலுக்கே போகிறேன் என்று அந்த இளைஞன் கூறியுள்ளார். பின்னர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.