பிரதமர் ரணில்விக்கிரமசிங்க சில நாட்களுக்கு முன் எரிபொருள் விலையை குறைப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.ஆகையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றனர்.ஆனால் கிளிநொச்சியில் இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்னும் விலை மாற்றம் செய்யப்படவில்லை.
இதனால், மக்கள் மிகவும் வருத்தத்துடன் சென்றுள்ளனர்.மேலும் பற்று சீட்டுக் கேட்டபோது முகாமையாளர் இல்லை என கூறி மழுப்பிச் சென்றுள்ளனர்.
இதனால், பொதுமக்கள் இதனை யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் கலைந்து சென்றுள்ளனர்.