மத்திய அரசு அதிரடி உத்தரவு! 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைப்பு!

இன்று நடைபெற்ற ஜி.எஸ்.டி சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 31-வது கூட்டம் 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜி.எஸ்.டி, சரக்கு மற்றும் சேவை வரி கடந்த வருடம் 2017 ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இதன்மூலம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டது.

தற்போது, 35 பொருட்களுக்கு 28% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களை குறைவான வரி எல்லைக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. சில பொருட்கள் 18% வரியிலிருந்து 5% வரிக்கு மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

ஜி.எஸ்.டி சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குழுவின் 31-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளாக நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

இந்நிலையில் சிமெண்ட், ஆட்டோ மொபைல்ஸ் உள்ளிட்ட 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது மேலும், டிஜிட்டல் கேமரா, டிஷ் வாஷர், ஏசி, டிவி போன்ற மின்சாதனங்களின் விலை சரியும் வகையிலும் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற 31-வது கூடத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.