ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.! குதூகலிக்கும் திமுக தொண்டர்கள்.!!!

தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு அமமுகவின் தினகரன் தரப்புக்கு சாதகமாக வந்திருந்தால், தமிழக அரசியல் என்பது தலைகீழாய் மாறி இருக்கும். ஆனால் தீர்ப்பு பாதகமாக வர எல்லாமே தலைகீழாக மாறி உள்ளது. அதில் இருந்து தினகரன் தரப்பு ஆட்டம் கண்டுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்க நினைத்த முக ஸ்டாலின், செந்தில் பாலாஜியை திமுகவில் இணைத்துக்கொள்ள ஒரு ராஜ தந்திர அரசியல் திட்டம் போட்டார். அதன்படி, கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தினகரன் கட்சி பிரமுகர் ஒருவரின் இல்ல காதணி விழா திருச்சியில் நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் கட்சியின் முன்னணி நிர்வாகி என்ற பெயரில் செந்தில் பாலாஜி அழைக்கப்பட்டு. அதே சமயத்தில் திருச்சி மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினரும், தலைவர் மகனின் உற்ற தோழனுமான அன்பில் மகேஷ் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவில் இனைய சம்மதமும் வாங்கிவிட்டார் திமுகவின் தலைவர். மேலும் பலரையும் அழைத்து வரவும் திட்டம் தீட்டியுள்ளார் தளபதி.

இதற்கிடையே இன்று காலை 11.30 மணி அளவில் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும், செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்கள் 1500 க்கும் மேற்பட்டவர்களை, 50 பேருந்துகள் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் திமுகவில் அதிமுக, அமமுகவின் முக்கிய நிர்வாகிகளும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் அண்ணா அறிவாலயத்தில் கரூர் மாவட்ட அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள், திமுகவில் இணைய குவியத் தொடங்கியுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.