அடுத்தவன் மனைவியை காதலித்து கல்யாணம் செய்வது சரியா? ஆசை காதலில் கடைசியில் நடந்த திருப்பம்

பெங்களூரில் துணிக்கடை ஒன்றில் முகமது பிலால் (21) வேலை பார்த்து வந்தபோது, அவரது கடைக்கு அடிக்கடி வந்துபோகும் ஜெயபாத் தலாசும் (19) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

இருவரும் சென்னைக்கு ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என பிலாலிடம் அவரது காதலி ஜெயபாத் தலாசும் கூறியுள்ளார்.

இதையடுத்து சென்னைக்கு சென்று திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்த அவர்கள் நேற்று சென்னைக்கு வந்தனர். கோயம்பேட்டில் வந்திறங்கிய பிலால் தனது நண்பன் வவுசான் என்பவர் உதவியுடன் தனது காதலி தாலாசின் நகையை அடகு வைத்தார்.

இந்நிலையில் பெண் வீட்டார் நகையுடன் தங்கள் பெண்ணை பிலால் கடத்தி சென்றுவிட்டதாக கர்நாடகா, சிவாஜி நகர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

பெண் கடத்தல் வழக்கு அடிப்படையில் பிலால் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த பொலிசார் பிலாலின் செல்போன் சிக்னல் மூலம் அரும்பாக்கத்தில் இருப்பதை அறிந்து அரும்பாக்கம் பொலிசார் உதவியுடன் காதலர்களை பிடித்தனர்.

பிலாலை பொலிசார் தாக்கியபோது, பிலால் ஏன் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துக்கொண்டால் என்ன தப்பு என்று கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார் காதலித்து கல்யாணம் செய்வது தப்பில்லை, ஆனால் அடுத்தவர் மனைவியை காதலித்து கல்யாணம் செய்வது சரியா? எனக்கேட்டு தாக்கியுள்ளனர்.

அதன்பின்னர் தான் பிலாலுக்கு தெரியவந்தது, தனது மனைவிக்கு கல்யாணம் ஆனதோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தையும் உள்ளது என்று, இதனை கேட்டு பதில் எதுவும் சொல்லாமல் அவமானத்தில் தலைகுனிந்து நின்றுள்ளார்.

பிலால் மீது பெண் கடத்தல் வழக்கு உள்ளதால் சிவாஜி நகர் பொலிசார் அவரை கைது செய்தனர்.