ஐஸ்வர்யா ராய் விவாகரத்து விடயத்தில் மனதை மாற்றிக்கொண்ட கணவர்!

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்து கொள்வதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

அமைச்சராக இருந்தவர் தேஜ் பிரதாப் யாதவ். இவர் பிஹார் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை கடந்த மே 12-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதனையடுத்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார் தேஜ் பிரதாப். கடந்த நவ.2-ம் தேதி பாட்னா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரிய தேஜ் பிரதாப் யாதவ், ‘துயரத்துடன் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று தெரிவித்தார்.

மேலும், தனது மனைவி ஐஸ்வர்யா ராய் நகரத்து வாழ்க்கையை விரும்புபவள், நாள் எளிமையான +வாழ்க்கையை விரும்புகிறேன், இதுவே எங்களுக்கு ஒத்துப்போகவில்லை என தேஜ் கூறியிருந்தார்.

இந்தநிலையில் விவகாரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தேஜ் பிரதாப் திடீரென திரும்ப பெற்றுள்ளார். பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை திரும்ப பெறுவதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தல் காரணமாக அவர் விருப்பமின்றி இந்த முடிவை எடுத்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் பணிகளில் வேகம் காட்ட வேண்டி சூழல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லாலு குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.