மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுணதீவு வீதித்தடையில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினரே இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.







