அஜித் கேட்ட கேள்வியால் அதிர்ந்து போன நடிகை! பரபரப்பு பேட்டி!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம்” படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் “விஸ்வாசம்” படத்தில் கைகோர்த்துள்ளார்.

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ‘கோலிசோடா’ படத்தில் ஆச்சி கேரக்டரில் நடித்த நடிகை சுஜாதா சிவக்குமார் சமீபத்தில் அஜித்துடனும் பணியாற்றியதை பற்றி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: நான் அஜித்துடன் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். அதன் பிறகு 3 வருடம் கழித்து, இப்போதுதான் அவருடன் விஸ்வாசம் படத்தில் நடிக்கிறேன். மூன்று வருடம் கழித்து விசுவாசம் படப்பிடிப்பில் என்னை சந்தித்து பேசினார் என்று கூறினார்.

அப்போது என் மகன்களை பற்றி நலம் விசாரித்தார். நான் வீரம் படத்தின் படப்பிடிப்பின் போது என் பசங்களை பற்றி கூறி இருந்தேன். அப்போது என் பசங்க ஸ்கூல் போறாங்கன்னு சொல்லியிருந்தேன். அதை வைத்து இப்போது ஸ்கூல் படிச்சிட்டுருந்த பசங்க காலேஜ் போய்ட்டாங்களான்னு கேட்டார். நான் அந்த நிமிடம் நிமிடம் அதிர்ந்து போனேன். 3 வருடம் முன்பு சொன்னதை நான் மறந்துவிட்டபோதும் என்னிடம் அவர் கேட்டது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது என்றார்.