இயக்குனரின் ஓபன் டாக்., அதிர்ச்சியில் திரையுலகம் – ரசிகர்கள்.!!

அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “அதோ அந்த பறவை போல”. இந்த திரைப்படத்தை செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. அட்வென்ச்சர் மற்றும் திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இளம் தொழிலதிபராக இருக்கும் அமலாபால் காட்டிற்குள் சென்று அங்கு வைத்து என்னென்ன துன்பங்களை அன்பவித்து., அந்த காடுகளை விட்டு எவ்வாறு வெளியே வருகிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி., சமீர் கோச்சார்., பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரமும் மற்ற திரையுலக பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பற்றி படத்தின் இயக்குனர் வினோத் அவர்கள் கூறுகையில்., இந்த படத்தின் படப்பிடிப்பானது மேற்குத்தொடர்ச்சி மலைகள் மற்றும் வடமாநிலங்களில் உள்ள மலைகளில் வைத்து படமாக்கப்பட்டுள்ளது.

நடிகை அமலாபால்., உயரமான மரங்களில் ஏறுவது போன்ற காட்சிகளில் அவரே முன்வந்து நடித்தார். படத்தில் காட்சியகப்பட்ட பெரும்பாலான காட்சிகள் முதல் படப்பிடிப்பிலேயே சிறப்பாக அமைந்தது. மேலும் அமலாபால் அந்தந்த காட்சிகளுக்கு தேவையானவற்றை நான் எதிர்பார்த்ததை விட ஒரு படி மேலாக தனது திறமையை வெளிப்படுத்தி எனது தேவையை பூர்த்தி செய்தார்.

இந்த படம் முழுவதும் இரசிகர்களை புதிய அனுபவத்தில் கொண்டு செல்லும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. படைப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது நிறைவு கட்டத்தை தொட்டுவிட்ட நிலையில்., விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்போம் என்று கூறினார்.