திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகளீர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி அவர்கள் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது.,
தமிழக மக்கள் பல்வேறு சோதனைகளை சந்தித்து வரும் வேலையில்., மக்களிடையே பெரும் மதவாத பிளவை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி முயன்று வருகிறது., அந்த அரசுக்கு உதவும் வகையில் தமிழக அரசும் ஜால்ரா தூக்கி வருகிறது. இந்த அரசுக்கு மக்களை பற்றிய சிந்தனையும் அக்கறையும் கிடையாது.
ஆட்சியை பிடித்து தக்கவைப்பதிலேயே குறியாக அதிமுக அரசு இருந்து வருகிறது. அவர்களை போல நமது தலைவர் செய்யாமல் மக்களுக்காக எத்தனையோ திட்டங்ளை செயல்படுத்தியது., அவருக்கு பின்னர் தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலனுக்காக பாடுபடுவார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் மக்கள்விரோத அரசை விரைவில் அகற்றி., 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் போது உங்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.






