தாமதமாக வந்த அதிகாரிகள் : வாகனத்தை கொளுத்திய மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாமதமாக சென்ற மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மற்றும் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரின் 5 வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.4புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் கஜா புயலினால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த பயிர்களை கணக்கீடு பணி மற்றும் சீரமைப்பு பணிக்கு சென்ற ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி மற்றும் அவரது வாகனத்தை புயல் பாதிக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து தாமதமாக ஆய்வு பணிக்கு வந்ததாக கூறி சிறைபிடித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டம், மேலும் தாசில்தாரை மீட்க சென்ற ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் அய்யனார் மண்டை உடைத்ததால் அங்கு மேலும் பரபரப்பானது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆலங்குடி வட்டாச்சியர்  வாகனம், ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் அய்யனார் ஆகியோர்களின்  5 வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.  இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்துக்கு செல்லும் ஆலங்குடியில் திருச்சி சரக டிஐஜி  திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கிகளுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திடீரென்று குவிக்கப்பட்ட போலீசார் அனைவரும் கொத்தமங்கலத்துக்கு செல்லாமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் 5 அரசு அதிகாரிகளின் வாகனம் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து 5 மாவட்டங்களை சேர்ந்த 200ற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . இதுவரை 100க்கும் மேற்பட்ட போலீசார் விதி விதியாக சென்று கைது செய்துள்ளனர்.