மதுபோதை தலைக்கேறி ரோட்டில் விழுந்து கிடந்த தனது எழுப்ப முயற்சித்த 2 வயது சிறுமி. இதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க செய்தது. இந்த குழந்தைக்கு இப்படிபட்ட ஒரு தந்தையா?
29 வயதுதக்க ஒருவர் குடித்துவிட்டு மதுபோதையில் ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். ரோட்டில் விழுந்த இவரை தனது இரண்டு வயது மகள் எழுப்பி உள்ளார்.
தனது தந்தை போதை தலைக்கேறி சென்னம்மாசிலை என்ற இடத்தில் ரோட்டில் மயங்கிவிழ, ஏதுமறியா அந்த பிஞ்சு குழந்தை தன் தந்தையை எழுப்பும்பொருட்டு மயங்கி கிடந்த அவரை அடித்து ”எழுந்திரு எழுந்திரு அப்பா” என சுமார் ஒரு மணிநேரம் போராடியது. இந்த காட்சியை அங்கு ரோட்டில் சென்றவர்களை கண்கலங்க செய்தது.






