சமீப காலமாக இந்தியாவின் பல இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனால் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த முகமது இப்ரான் அலி அக்தர் (37). இவரது நண்பர்கள் ஆசிப் அலி (33), தன்வீர் அலி (37), சலே அகமது எல்-ஹகாம் (39), நபீல் குர்ஷித் (35), இக்லாக் யூசப் (34) ஆகிய இவர்கள் அனைவரும் 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இவர்கள் அனைவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்களாக இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் விசாரணையில் இவர்கள் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.இந்த 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
பின்னர் அதை தொடர்ந்து அவர்கள் 6 பேருக்கும் குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் 101 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த 6 நபர்களில் அக்தார் என்பவருக்கு 23 ஆண்டுகளும் குர்ஷித்துக்கு 19 ஆண்டுகளும், யுசப்புக்கு 20 ஆண்டுகளும், தன்வீர் அலிக்கு 14 ஆண்டுகளும், எல்-ஹசாமுக்கு 15 ஆண்டு களும், ஆசிப் அலிக்கு 10 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.






