கட்டாய விபச்சாரியாக மாற்றும் நடன இயக்குனர்.!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியை சார்ந்தவர் அக்னிஸ் ஹாமில்டன் (56). இவர் திரைத்துறையில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

இவரின் இல்லத்திற்கு நடனத்தை கற்கவும்., திரைத்துறையில் நட்சத்திரமாக ஒளிரவேண்டும் என்பதற்க்காக இவரை பெருபாலான பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களும் இவர்களுள் அடங்குவர்.

நடன நிழற்ச்சிகளில் பங்கேற்பதற்காக செல்லும் இளம்பெண்களை கட்டாய விபசாரத்தில் இவர் ஈடுபடுத்தி வருவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் அவரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., இவர் கென்யா., பக்ரைன் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இருந்து நடன நிகழ்ச்சிகளுக்காக வரும் இளம் பெண்களை மிரட்டி., அவர்களின் கடவு சீட்டுகளை (பாஸ்போர்ட்) பறிமுதல் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதன் மூலமாக பெரும் பணத்தையும் சம்பாதித்தது தெரியவந்தது.

இதனை அறிந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இந்த சம்பவத்தில் வேறு எவரேனும் உதவி செய்கின்றனரா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.