திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள இராஜகோபுரத்தின் அருகே சிவகங்கை தீர்த்தக்குளம் உள்ளது. மேலும் இந்த தீர்த்த குளத்திற்கு அருகில் காலபைரவர் சன்னதி தீர்த்தக்குளமும்., பிரம்ம தீர்த்த குளமும் உள்ளது. இந்த குளங்களில் பக்தர்கள் இறங்காமல் இருப்பதற்கு வெளியானது அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது நடைபெற்று வரும் தீபத் திருவிழாவிற்க்காக கோவிலில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்., இன்று மதியம் 1 மணியளவில் சிவகங்கை தீர்த்த குளத்திற்கு அருகில் பிள்ளையார் கோவிலில் பெண் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
அங்கு நின்ற பெண் திடீரென குளத்திற்குள் சென்று தற்கொலை செய்துகொண்டார். இதனை கவனித்த சக பக்தர்கள் கூச்சலிடவே., உடனடியாக அங்கிருந்த காவல் மற்றும் மீட்பு துறையினர் குளத்தில் இறங்கி அந்த பெண்ணை மீட்டு அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அந்த பெண் குறித்த விபரம் தெரியாததால் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






