4 வயது சிறுமிக்கு 42 வயது பெண்ணால் லிப்டில் நேர்ந்த கொடூரம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள டிராம்போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தயானந்த. இவரது மனைவியின் பெயர் சரிகா. இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில்., பியூஸ் என்ற மகனும்., ஜான்கவி எனும் 4 வயது மகளும் உள்ளனர்.

சிறுமி ஜான்கவி நேற்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கீழ் தளத்தில் தனது அண்ணனான பியூசுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் ரிஷ்வானா ஷேக் (வயது 42) என்கிற பெண்மணி சிறுமியை லிப்டிற்கு உள்ளே அழைத்துள்ளார்.

அந்த சிறுமியும் ஏதும் அறியாததால் உள்ளே சென்றுள்ளார்., அந்த சிறுமி லிப்டிற்கு உள்ளே சென்றவுடன் லிப்டின் விளக்குகளை அழைத்து விட்டு அந்த சிறுமியை காலால் எட்டி உதைத்து அடித்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த கம்மலை பறிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

அவர் அடித்ததில் வலிதாங்க முடியாத சிறுமி லிட்டிற்குள் இருந்து அலறி துடிக்கவே., அவரின் அலறல் சத்தத்தை கேட்ட குடியிருப்பு வாசிகள் அதிர்ந்துபோனார்கள்., உடனடியாக லிப்ட்டின் கதவுகளை திறந்து குழந்தையை மீட்டனர்.

குழந்தையை தாக்கிய ரிஷ்வானவை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ரிஷ்வானவை கைது செய்த காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.