வீடுகளை விட்டு தெருவுக்கு வந்த பிரபல திரையுலக நட்சத்திரங்கள்.!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக தற்போது வரை சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் அதனருகே இருந்த வீடுகள் ஊர்கள் ஆகிவை முற்றிலும் தீயில் கருகின.

மேலும் அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள்., கார்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமாகின. இந்த காட்டுத்தீயால் தற்போது வரை சுமார் 50 பொதுமக்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தற்போது ஏற்பட்ட தீ விபத்தானது இதற்கு முன்னர் ஏற்பட்ட தீ விபத்துகளை காட்டிலும்., இந்த தீ விபத்தே பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வீடுகளை இழந்தவர்களின் பட்டியலில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் பெயரும் தற்போது அடிபட்டுள்ளது. அந்த வகையில் லேடி காகா, கிம் கார்தாஷியான், கன்யெ வெஸ்ட் ஆகியோரின் வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த விபத்தில் தங்களின் செல்லப்பிராணிகளுடன் உயிர் தப்பிய புகைப்படம் எடுத்து தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இவர்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து சாம்பலாகி உள்ளது.