கஜா புயலால் உள்வாங்கிய கடல்! அச்சத்தில் மக்கள்!

கஜா புயல் இன்றைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 210 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி 17 கிமீ வேகத்தில் வேகமாக நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சில இடங்களில் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக நாகையில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், கடலூர் துறைமுகத்தில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், குளச்சலில் 8ம் எண் கூண்டும் ஏற்ப்பட்டுள்ளது. மேலும்,புதுச்சேரியில் 9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னையில் 3ம் எண் கூண்டும் ஏற்றியுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை கடல் பகுதியில் 10 அடிக்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், கலலோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.