தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் “வந்தா ராஜாவா தான் வருவேன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தினை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் பண விநியோகஸ்தர்களுக்களின் பிரச்சினைக்கு நடிகர் சிம்பு தீர்வு காண வேண்டும் எனவும் . அதுவரை “வந்தா ராஜாவா தான் வருவேன்” படம் வெளியிட முடியாது என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் படக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் சிம்புவுக்கு “ரெட் கார்ட்” போடவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.இதனால் சிம்பு ரசிகர்கள் ஆவேசமாகி பொங்கியெழுந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Press Release From #STR #VRV #PongalukkuVarom #NeengaIllamaNaanilla pic.twitter.com/OS17giCBk0
— Hariharan Gajendran (@hariharannaidu) 14 November 2018
அதில்.என் அன்பார்ந்த ரசிகர்களே தயவுசெய்து வந்தா ராஜாவா தான் வருவேன்” ரிலீஸ் பிரச்னை பற்றி கவலைப்பட வேண்டாம். எந்த ஒரு தனி மனிதரின் முடிவும் என்னை ஓரங்கட்டிவிட முடியாது. ஒரு குழுவாக, அமைப்பாக எடுக்கப்பட்ட முடிவுக்கு சரியான முறையில் தீர்வு காணப்படும். ஆத்திரத்தில் யாரும் யாரையும் புண்படுத்த வேண்டாம். அன்பை பகிருங்கள். தொடர்ந்து நீங்கள் எனக்கு கொடுக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை, நம்முடைய பணியை நாம் செய்வோம் அதற்கான முடிவு தானே வரும் .என அதில் குறிப்பிட்டுள்ளார்.