கம்பஹா, துனகஹா-கொடிகமுவ வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஒருவர் கம்பஹா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் இத்தகொதெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் இறந்தவர் தன் மனைவியுடன் உணவகத்திற்கு சென்றபோது, உணவகத்தின் உரிமையாளரும் மேலும் இரண்டு பேரும் தம்பதியினரைத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மனைவி திவுலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைமறைவான சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.







