நடிகை ரோஜா திருப்பதி கோவிலுக்குள் நுழைய தடை!

பிரபல நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வுமான ரோஜா-வை திருப்பதி கோவிலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா போர்க்கொடி தாக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத்துறையில் ரசிகர்களிடையே அதிக கவரப்பட்ட நடிகை ரோஜா, தற்பொழுது அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து உள்ளார். ஆந்திர மாநிலத்தின் தமிழர்கள் வாழும் பகுதியான நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள நடிகை ரோஜா உள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான ‘காளிமுத்து கிருஷ்ணம்ம நாயுடு’வை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நடிகை ரோஜா போட்டியிட்டு, 858 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அனிதா, இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகை ரோஜாவை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நுழைய தடைவிதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திருமலை மிகவும் புனிதமான ஒரு ஸ்தலம் என்றும், இங்கு அரசியல் பேச தடை உள்ளதாகவும் தெரிவித்த அவர், திருமலைக்கு வரும் நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா, தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம் அரசியல் பேசுவதால், அவருக்கு திருப்பதி கோவிலுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்” என்று பகிரங்கமாக தெரிவித்தார்.