இத்தாலியை சேர்ந்த பெண்ணொருவர் 20 ஆண்டுகளாக மாப்பிள்ளை தேடி கிடைக்காத விரக்தியில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.லவுரா மெசி (40) என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளாக தனக்கு ஏற்ற மணமகனை தேடி வந்தார்.ஆனால், அவருக்கு அப்படி ஒருவர் அமையவேயில்லை. இதனால் வெறுத்து போன மெசி தன்னை தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.அதன்படி 70 விருந்தினர்கள் முன்னிலையில் தன்னை தானே மணந்தார்.இத்திருமணத்தில் வெள்ளை நிற உடையில் ஜொலித்த மெசி, மோதிரத்தை தனக்கு தானே அணிவித்து கொண்டார்.திருமணத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்த நிலையில் உறவினர்களுடன் மெசி ஆடி பாடி கொண்டாடினார்.
இது குறித்து மெசி கூறுகையில், என்றாவது ஒருநாள் எனக்கு சரியான துணையை நான் கண்டால் என்னையே விவாகரத்து செய்துவிட்டு அந்த நபரை திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.






