சுவையான வெஜிடபிள் நூடுல்ஸ் செய்வது எப்படி?

தினம் ஒரு சமையலில் இன்று ” வெஜிடபிள் நூடுல்ஸ் ” செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

வெஜிடபிள் நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – ஒரு பாக்கெட்,
கேரட் துருவல், பட்டாணி,
நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய ஸ்வீட் கார்ன் கலவை – ஒரு கப்,
நறுக்கிய வெங்காயம் – 1,
நறுக்கிய கொத்தமல்லி – சிறி தளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

  1. கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. மேலே கொடுத்துள்ள எல்லா காய்கறிகள், உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  3. பின் பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் கொஞ்சம் சேர்க்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ஸ் சேர்த்துக் கிளறவும். நூடுல்ஸ் வெந்த பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்