நம் உடலில் வியர்வை நாற்றம் ஏன் வருகிறது?

உடலில் வியர்வையானது புரோட்டீன் மற்றும் கொழுப்புகளுடன் சேர்ந்து அபோகிரைன் என்னும் சுரப்பியிலிருந்து வெளிப்படுகிறது.

பொதுவாக துர்நாற்றம் என்பது நம் உடலில் ஏற்படும் அதிக வியர்வையினால் வரக்கூடியது. அதனால் மற்றவரின் பக்கத்தில் செல்ல முடியாத அளவுக்கு கெட்ட வாடையாக வீசும்.

அதனை போக்க எந்த முயற்சிகள் மேற்கொண்டாலும் முடிவில் தோல்வியே கிடைக்கும்.எனவே உடல் துர்நாற்றம் எப்படி ஏற்படுகிறது மற்றும் அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

வியர்வை நாற்றம் ஏற்பட காரணம்
  • நாம் தினமும் உண்ணும் உணவுகளில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருந்தால், உடலில் இருந்து கீட்டோன்கள் வெளியேற்றிவிடும் இதனால் நம் உடம்பில் வியர்வை அதிகமாகும்.
  • மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசும். ஏனெனில் அவர்கள் உடலில் இருந்து டாக்ஸின்கள் முறையாக செரிமான மண்டலத்தின் வழியே வெளியேற்றப்படாமல் அவைகள் சருமத்துளைகளின் வழியே வெளியேற்றப்படும்.
  • நம் அன்றாட வாழ்வின் உணவில் காப்ஃபைன் மற்றும் ஆல்கஹால் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், உடலில் வியர்வை அதிகமாகி துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.
  • நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும். இதனால் கொழுப்புகள் எரிபொருளாக உடைக்கப்பட்டு, அவை கீட்டோன்களாக மாறி, உடலில் கெட்ட துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • நம் உடலில் பலவையான வியர்வைகள் ஏற்பட்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மன அழுத்தம் காரணமாக தோன்றும் வியர்வையானது மிகவும் மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
  • மாட்டு இறைச்சியை சாப்பிடும் போது, அதில் உள்ள அமினோ ஆசிட், நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாவுடன் சேரும். இதனால் செரிமானம் தாமதமாக நடைபெற்று அதிலிருந்து வெளிப்படும் வாயு மிகவும் மோசமான துர்நாற்றத்தை உண்டாக்குகிறது.
வியர்வை நாற்றத்தை போக்குவது எப்படி?
  • வியர்வை அதிகம் ஏற்படும் பகுதியில் முடியை அகற்றவேண்டும்.அக்குள், கை மற்றும் காலாக இருந்தாலும், வியர்வை உருவாக்கும் பகுதிகள் தூய்மையாக வைக்கப்பட வேண்டும்.
  • கோடை காலங்களில் எப்போதும் பருத்தியிலான உடைகளை அணியுங்கள்.இவை வியர்வையை வேகமாக உறிஞ்சுவதால்,வியர்வை நாற்றம் ஏற்பட வாய்ப்பை குறைக்கிறது.
  • அலுமினியம் குளோரைடு கொண்ட திரவியங்களை இரவு படுக்கும் போது அக்குளில் தடவிக் கொண்டால் வியர்வை நாற்றத்தை குறைக்கலாம்.
  • தண்ணீரில் எலுமிச்சை சாறை கலந்து குளித்தால், வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கும். மேலும் வெட்டி வேரை குளிக்கும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றம் இருக்காது.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.இப்படி குளிப்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் குறைந்து புத்துணர்ச்சியை உணரவைக்கும்.