பால் ஊற்ற சென்றவருக்கு பால் ஊற்றிய யானை.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூருக்கு அருகில் உள்ள ஊர் விராலியூர். இந்த ஊரைச் சார்ந்தவர் ரமேஷ்., பால் வியாபாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் தினமும் தொண்டாமுத்தூரில் இருந்து விராலியூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று பால் ஊற்றி வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று இவர் விராலியூருக்கு பால் ஊற்ற சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவரின் பாதையை மறைத்தபடி ஒற்றை யானை ஒன்று திடீரென வந்து அவரையும்., அவரின் வாகனத்தையும் தூக்கி வீசியது. யானை தூக்கி வீசியதில் படுகாயமடைந்தார் சுரேஷ்.

சுரேஷை தூக்கி வீசிய யானை பிளிறவே., அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனக்காவல் துறையினர் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது யானை தூக்கி வீசியதில் மயக்கமடைந்த நிலையில் இருந்த சுரேஷை கண்ட அவர்கள் அவசர ஊர்திக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசஊதியின் மூலமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த யானையானது அவரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதும் இல்லாமல் அங்குள்ள விளைநிலங்களையும் சேதப்படுத்தி அந்த பகுதியிலேயே முகாமிட்டு வருகின்றது.

இந்தயானையை கும்கி யானை உதவியுடன் காட்டுக்குள் விரட்டக்கூறி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.