ஆவாக்குழுவுடன் தொடர்புடைய இவர்! அம்பலப்படுத்திய பிரபலம்..

வடக்கில் பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் ஆவாக் குழுவை மூன்று மாதங்களில் அடக்குவேன் என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஐரோப்பாவில் கூறியுள்ளார்.

அவர் எமது ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் ஏன் அதனைச் செய்யவில்லை. அப்போ ஆளுநருக்கும் ஆவாக்குழுவுக்கு தொடர்புகள் உள்ளனவா?

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். இன்று நல்லூர் இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் இவ்வாறான ஒரு கேள்வியை எழுப்பி அவருக்கும் ஆவா குழுவுடன் தொடர்புகள் உள்ளன என்றவாறு சாட்டையடி கொடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஆழமான நீச்சல் தடாகத்தில் குதித்|து நீச்சல் செய்யும் நீச்சல் வீரனின் மனநிலையில் தற்போது நான் உள்ளேன். 5 ஆண்டுகளுக்கு முன் வடக்கு மாகாணசபையில் ஒரு வேட்பாளராக என்னை நிறுத்தியபோதும் இந்த மனநிலையில்தான் நான் இருந்தேன்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் அஞ்சல் ஓட்டம் போன்றது. அதனை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

அல்லது அடுத்த தலைமுறையிடம் நாம் கையளிக்கவேண்டும். இன அழிப்புப் போரால் பெரும் அழிவுகளைச் சந்தித்த எமது இனம் ஒருபோதும் சோரவில்லை.

மகாவம்சத்தை சிங்கள மாணவர்களுக்குப் பாடமாகப் புகட்டும் வரையிலும் – தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று சிங்கள மக்கள் உணரும் வரையிலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இடைக் காலத்தில் இருந்தபோது 1987 ஆம் ஆண்டு மாகாணசபை அதிகாரம் கொண்டுவரப்பட்டது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக்கூட மாகாணசபை இருக்காது என்று தமிழ்த் தலைவர்கள் அன்றே நிராகரித்துவிட்டனர்.

முதலமைச்சர் நிதியத்துக்கு ஒப்புதல் கொடுக்க வக்கற்றவர்கள் எங்கள் தமிழ் தலைவர்கள் – என்றார்.