அமெரிக்க அதிபர் வீட்டுக்கு வெடிகுண்டு பார்சல்! அதிகாரிகள் அதிர்ச்சி!!

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கவில் வசிக்கும் பாதுகாப்பு மிக்க முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு பார்சல்களும் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் பாரக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரது பெயர்களில் வந்திருந்திருந்த பார்சல்களும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.

அப்போது அந்த பார்சலை செக் செய்த போது, அந்த பார்சல்களில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதுபற்றி விவரம் இன்னும் முழுமையாக வரவில்லை. எந்த அமைப்பும் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வ்ருகிறது.