பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்று பாடகர் செய்த செயல், சில நொடிகளிலேயே நேர்ந்த பெரும் துயரம்.!

பாடகர் ஒருவர் விமானத்தில் சாகசம் செய்ய முயற்சி செய்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் பிரபல பாடகர் ஜோன் ஜேம்ஸ். இவர் தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் பாடகர் மட்டுமில்லாமல் சிறிய சினிமாக்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.மேலும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பல வித்தியாசமான சாதனைகளை செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் இவர் பாடிக்கொண்டே விமானம் மூலம் சாகசம் செய்ய முடிவுசெய்து,இன்று விமானத்தின் இறக்கையில் ஏறி , விமானம் பறக்கும்போது இறக்கையிலேயே நின்று கொண்டு பாட முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில் விமானம் 5000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அவர் பாடிக்கொண்டே இறக்கையின் நுனிக்கு சென்றதால் இவர் நிலைதடுமாறி உள்ளார். மேலும் அப்பொழுது விமானமும் லேசாக கவிழ்ந்ததால் இவர் கீழே விழுந்துள்ளார்.

மேலும் அவர் கட்டியிருந்த பாராசூட்டை அவர் விரிக்கும்முன் அதிவேகமாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.