தமிழகத்தின் அடுத்த சி.எம் யார் தெரியுமா..?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றாலத்தில் நாளை வரை தங்கி இருக்கப்போகின்றனர்.

இது குறித்து தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் கூறுகையில், எங்களுடைய சட்ட மன்றத் தொகுதியை இந்த அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது.

வரும் 10-ம் தேதி முதல் தொகுதிவாரியாக போராட்டம் நடத்த உள்ளோம். தற்போது, 20 எம்.எல்.ஏ-க்கள் எங்களோடு குற்றாலத்தில் இருக்கிறார்கள்.

எங்களுக்குத் தோல்வி பயம் இல்லை. நாங்கள் தீர்ப்புக்காகக் காத்திருக்கவும் இல்லை. நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் கவலைப்பட மாட்டோம்.

சில அமைச்சர்கள் மற்றும் முதல்வரை மாற்றிவிட்டு ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவோம். வரும் 27-ம் தேதி, அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரன் மதுரை வருகிறார்.

அப்போது, நாங்கள் அனைவரும் அவரைச் சந்திப்போம். தீர்ப்புக்காக நாங்கள் குற்றாலத்தில் தங்கியிருக்கவில்லை’’ எனத் தெரிவித்தார்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது.

அதனால், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.