முக ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு!!

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 12 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு நீதிமன்றத்தில் முதல் வழக்காக, 2011-ல் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 6 வழக்குகளும், தற்போதைய முதல்வரை அவதூறாக பேசியதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல், பாமகவின் இளைஞர் அணி தலைவரும், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி இராமதாஸ் மீது, தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்து இருந்த அவதூறு வழக்கு காரணமாக இன்று முக ஸ்டாலின் மற்றும் அன்புமணி ராமதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முக ஸ்டாலின் & அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு தொடுத்தவெவ்வேறு அவதூறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜாரான திமுக தலைவர் மு க ஸ்டாலினும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸும் நேருக்குநேர் சந்தித்துகொண்டனர். கொள்கையில் அவரவருக்கு எதிர் எதிர் கருத்துக்கள் இருந்தாலும். இவர்கள் ஆரம்பகாலத்திலிருந்து ஒரு நல்ல நண்பர்கள். இந்நிலையில் இருவரும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.