கடவுளின் பெயரில் 9 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூரன்கள்!

ஒடிசாவில் காளி தெய்வத்திற்கு 9 வயது சிறுவனை நரபலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலங்கீரில் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் கன்ஷ்யாம், கடந்த 13ம் தேதி மயமாகிவிட்டதாக பொலிஸாரிடத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 3 நாட்கள் கழித்து அப்பகுதியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சிறுவனின் சடலத்தை கண்டறிந்தனர். மற்றொரு பகுதியில் சிறுவனின் தலையை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டதில் சிறுவனின் மாமா குஞ்ஜா ரானா மற்றும் உறவினர் ஷோபபான் ஆகிய இருவரும் சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நவராத்ரி அன்று காளி தெய்வத்திற்கு நரபலி கொடுத்தால் நல்லது என நினைத்தோம்.

எங்களுடைய இருசக்கர வாகனத்தில் சிறுவனை ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்று கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தோம் என கூறியுள்ளனர்.