தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து வந்தனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திடீரென நேற்று இரவு அவர்கள் அங்கிருந்து ஐந்தருவியில் இருக்கும் இசக்கிசுப்பையாவின் மற்றொரு சொகுசு விடுதிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஐந்தருவியில் இருக்கும் விடுதியில் தங்கியுள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.
இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வரும் வரை இங்கு தான் இருப்போம். தீர்ப்பு வந்த பிறகு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனை சந்திப்போம். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் செய்யவில்லை.
வருகிற 10-ந்தேதி இதனை கண்டித்து ஆண்டிப்பட்டி தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மற்ற 16 தொகுதிகளிலும் நடைபெறும். இறுதியாக ஆர்.கே. நகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். எங்களுக்கு ஆதரவாக மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள். வழக்கில், தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் சில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்யை மாற்றிவிட்டு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுத்து ஆட்சியை தொடருவோம் என்று அவர் தெரிவித்தார்.






