திருடன் என நினைத்து தனது காதலியை பார்க்க வந்த இளைஞரை பொதுமக்கள் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ஈக்காட்டுர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் இவர் தனது வீட்டிற்கு அருகே நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் நிற்பதை பார்த்துள்ளார்.
இது குறித்து அந்த இளைஞரிடம் முத்துக்குமார் கேட்ட போடு அவன் எந்த பதிலும் சொல்லாமல் திருதிருவென முழித்துள்ளான்.மேலும் அந்த இளைஞர் அங்கிருந்து நைசாக கிளம்ப முயன்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த முத்துக்குமார் திடீரென திருடன் திருடன் என கத்தி தூங்கி கொண்டிருந்த அனைவரையும் அழைத்துள்ளார்..
இதையடுத்து அங்கு திறந்த மக்கள் அந்த இளைஞரை பிடித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர் .ஆனால் அவன் போதையில் இருந்ததால் அவனால் பதிலளிக்க முடியவில்லை.
இதனால் இளைஞரை திருடன் என நினைத்த மக்கள் அவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவன் நான் திருடன் இல்லை அடிக்காதீர்கள் என பலமுறை கூறியும் தொடர்ந்து தாக்கப்பட்டதால் இளைஞர் மயங்கியுள்ளான் .
பின்னர் இது குறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு விரைந்த அவர்கள் அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞன் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தர்மராஜ் எனவும், ஈகாட்டுர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார் எனவும் தெரிய வந்தது.
இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்த நிலையில் அவர்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த தர்மராஜ் காதலியை பார்க்க அங்கு வந்துள்ளார்.மேலும் அந்த பெண்ணின் வீடு தெரியாமல் நின்றபோதே இச்சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






