மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி-மிமிக்ரி கலைஞர் அனூப் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயகிக்கப்பட்ட நிலையில், அவரது திருமணம் வைக்காமல் உள்ள கோவில் ஒன்றில் இன்று மிக எளிமையாக நடைபெற்றது.
கேரள மாநிலம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயலக்ஷ்மி. செல்லுலாய்ட் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானார்.கண் பார்வை இல்லாத நிலையிலும், அதனை குறையாக நினைக்காத இபவர் தனது திறமையால்,தனித்தன்மை வாய்ந்த குரலால் மலையாளம், தமிழ் திரையுலகில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் திகழ்ந்தார்.
இந்தநிலையில் இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன் கடந்த மாதம் வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு திருமணம் நிச்சயமானது. அதன் பின் விஜயலட்சுமி-அனூப் இருவரின் திருமணமும் எளிமையான முறையில் இன்று வைக்காமல் உள்ள கோவிலில் நடைபெற்றது. இதனை விஜயலட்சுமி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.






