ரஜினியை இயக்குவது யார்..? சற்று முன்னர் சகோதரர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

ஆதி காலத்தில் இருந்து ரஜினியின் அரசியல் வருகையை நோக்கி ரசிகர்கள் தவியாய் தவித்து காத்து கிடக்கின்றனர்.

அவருக்கு பிறகு அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் கமலஹாசன் கூட கட்சி தொடங்கி அடுத்த கட்டத்தை நோக்கி தனது அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

சமீபத்தில் ‘பேட்ட’ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. இந்த வருடம் எனது பிறந்த நாளில் நிச்சயம் அரசியல் அறிவிப்பு இருக்காது.

அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலையை மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கவனித்து வருகின்றனர்.

அதற்கான பணிகள் முடிவுற்ற பின்னரே அரசியல் அறிவிப்பு இருக்கும்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னால் பாஜக இருப்பதாகவும், அவர்கள் உத்தரவு கிடைத்த பின்பே அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றும் சில தகவல்கள் பரவி வந்தன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினியின் சகோதரர் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். தன்னுடைய நண்பர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் அல்லது கட்சி தொடங்கும் தேதி அப்போது அறிவிக்கப்படும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்குப் பின்னணியில் பா.ஜ.க. இல்லை’ என்று கூறியுள்ளார்.