திருமணமான இந்திய வீரர்கள் சார்பில் விராட் கோலி விடுத்துள்ள வேண்டுகோள்?

இந்திய அணி வீரர்கள் வெளிநாடுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவர்களின் மனைவிமார்களையும் அழைத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய அணித்தலைவர் விராட் கோலி விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாக குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி இவ்வாறான வேண்டுகோளை விடு;த்துள்ளார் ஆனால் நாங்கள் உடனடியாக இது குறித்து முடிவெடுக்கப்போவதில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

இது குறித்த முடிவை புதிய அதிகாரிகளிடம் விடப்போகின்றோம் தற்போதைக்கு இது தொடர்பான கொள்கை மாறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக வீரர்கள் வெளிநாட்டு பயணங்களின் போது தங்கள் மனைவிமார்களை அழைத்துசெல்வதற்கு அனுமதிக்கவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையிடம் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வீரர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களுடன் மனைவிமார்கள் இரண்டு வாரம் மாத்திரம் தங்கியிருக்கலாம் என இந்த வருட ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.