கமலை பார்க்க விரும்பிய பெண் நிர்வாகிகள்! தலை சுற்றி நின்ற பெண் நிர்வாகிகள்!

அண்மையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் திருப்பூர் மாவட்டங்களில் பயணம் செய்து தனது கட்சிக்கான பிரச்சாரத்தை நடத்தினர். அப்போது அவர் பொள்ளாச்சியில் பேசும்போது “புரட்சிவெடிக்க மூன்று நிமிடம் போதும்” என தனது ரசிகர்கள் மத்தியில் முழங்கினார்.

ஆனால், கமல் மையம் கொண்ட கொங்கு பகுதியான கோவை மாவட்டத்தில் அவரது கட்சிக்குள்ளே வேறுவிதமான புரட்சி நடப்பதாக செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கட்சி பிரச்சாரத்திற்காக கமல் கோயம்புத்தூர் வந்தபோது அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என அக்கட்சியின் மகளிரணியினர் சிலர் விருப்பம் தெரிவித்து முயற்சி செய்துள்ளார்கள்.

ஆனால், அப்போது அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. அக்கட்சியின் பொறுப்பாளர் ஒருவரை பார்த்து தங்களது விருப்பத்தை தெரிவிக்க அதற்கு அவர், சும்மாவெல்லாம் அவரைச் சந்திக்க முடியாது. கட்சிக்கு நிதி கொடுத்தால்தான் சந்திக்க முடியும்” என வசூல் வேட்டையை தொடங்கியுள்ளார் அந்த பொறுப்பாளர்.

இந்த பதிலை எதிர்பார்க்காத அக்கட்சி பெண் நிர்வாகிகள் அலண்டு தான் போனார்கள். இங்கும் இப்படி தானா? இதற்கு அங்கேயே இருந்துருப்போமே! என்று கட்சியின் மண்டலப் பொறுப்பாளரிடம் குமுறியுள்ளார்கள்.

பெண் நிர்வாகிகளின் குமுறலை கேட்ட அந்தப் பொறுப்பாளர், “தலைவர் நிதி கேட்பதாக இருந்தால் இப்படி மறைமுகமா கேட்கமாட்டார் என்றும், இது யாரோ ஏமாற்று பேர்வழியின் வேலை எனவும் அவர் அந்த நிர்வாகிகளை சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.