கரும்பு தோட்டத்தில் பாய்ந்த இந்திய விமானம்! அந்தரத்தில் இருந்த விமானிகள்!

வானில் பறந்துகொண்டிருந்த இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று கரும்புத் தோட்டத்தில் விழுந்தது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகளும் கீழே குதித்து உயிர் தப்பினார்கள். .

உத்தரப் பிரதேசம் பாக்பத் மாவட்டத்தில் நேற்று காலை இந்திய விமானப் படையின் சிறிய ரக விமானம் ஒன்று விண்ணில் பறந்துகொண்டிருந்தது. பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட என்ஜின் கோளாறினால் அது தாறுமாறாக பறக்க ஆரம்பித்தது.

இதனால் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உடனடியாக எச்சரிக்கை அடைந்தனர். எச்சரிக்கையாக பாராசூட்டை அணிந்துகொண்டு விமானத்தில் இருந்து கீழே குதித்தனர். விமானிகள் இல்லாமல் சிறிது தூரம் தாறுமாறாக பறந்த விமானம் பின்னர் அங்கிருந்த கரும்புத் தோட்டத்தில் கீழே விழுந்தது.

பயணம் செய்த விமானப்படை விமானிகளுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவர்களுக்கு சிறு காயமும் இல்லாமல் அவர் உயிர் தப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து இந்திய பாதுகாப்புத் துறைக்கென தனியாக உள்ள அதிகாரபூர்வ குழுவின் விசாரணைக்கு உத்தரவிடபட்டுள்ளது.